கூலிப்படை கலாச்சாரம் அதிகரித்துவிட்டது... அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக: திருமாவளவன்
சென்னை: தமிழகத்தில் கூலிப்படை கலாசாரம் அதிகரித்துள்ளதைக் கட்டுப்படுத்தும் விதமாக, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட மாநில அரசு முன்வர வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நாள்தோறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகளவில் நடைபெறுகின்றன.

குறிப்பாக, கடந்த வாரம் சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி என்ற இளம்பெண் மர்ம நபரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.இதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சுவாதியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுவாதி கொலை செய்யப்பட்டு கிடந்த புகைப்படத்தை பார்த்தேன் தொழில் முறை கொலையாளிகள் (கூலிப்படையினர்) கொலை செய்தது போல் இருக்கிறது.
தமிழகம் முழுவதும் சமீபத்தில்நடக்கும் கொலைகளில் அடுக்கடுக்காக கூலிப்படை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் தமிழக முதல்வர் சட்டசபையில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வாதாக கூறிவருகிறார்.
சுவாதி கொலையை கவுரவ பிரச்சனையாக பார்க்காமல் இதை சமூக பிரச்சனையாக பார்க்க வேண்டும். தமிழகத்தில் அதிகரித்து வரும் கூலிப்படை கலாச்சாரத்தை ஓடுக்க அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். இதற்காக நடவடிக்கையில் தமிழக அரசு இறங்க வேண்டும் என்றும் திருமாவளன் தெரிவித்துள்ளார். சுவாதி குடும்பத்திற்கு தமிழக அரசு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications