விடுதலை சிறுத்தைகள் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு... திருமாவளவன் எங்கே போட்டி?
சென்னை: சட்டசபைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் நிறுவனர் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ளார். 25 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. நாளை இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
மே 16ம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்கள் நலக்கூட்டணி தேமுதிக கூட்டணியில் இணைந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. புதுச்சேரியில் 7 தொகுதியில் போட்டியிடுகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தொல். திருமாவளவன் ஆர். கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடுவார் என்று கூறப்படும் அக்கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பற்றியோ, திருமாளவன் போட்டியிடும் தொகுதி பற்றியோ எந்த தகவலும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.
விசிக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்:
புவனகிரி - சிந்தனைச் செல்வன்
குன்னம் - ஆளூர் ஷாநவாஷ்
ஊத்தங்கரை - களியமுதன்
சேலம் தெற்கு - ஜெயச்சந்திரன்
மயிலம் - பாலாஜி
வேலூர் - அப்துல் ராஹ்மான்
செய்யூர் - கரோலின்
துறையூர் - ஆதிமொழி
ராசிபுரம் - அர்ஜூன்
வந்தவாசி - மேக்தா ரமேஷ்
சோழிங்கநல்லூர் - பன்னீர் தாஸ்
புதுச்சேரியில் விசிக போட்டியிடும் தொகுதிகள்
ஊசுடு - அங்காளன்
வில்லியனூர் - முகமது ஹாலித்
புதுச்சேரியில் 7 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இன்று 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications