ஈ.வி.கே.எஸ். என்னைத் தெரியாது என்று கூறியது நல்லது தான்.. திருநாவுக்கரசர் அதிரடி பதில்!
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் என்னைத் தெரியாது என்று கூறியது நல்லது தான் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு, திருநாவுக்கரசரை யார் என்றே எனக்கு தெரியாது என கூறி பேட்டியை முடித்துக்கொண்டார் இளங்கோவன். இதற்கு திருநாவுக்கரசர் அளித்த பதிலில், அவர் என்னைத் தெரியாது என்று கூறியது நல்லது தான் எனத் தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இன்று இளங்கோவன் நேரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பும்போது, திருநாவுக்கரசரை யார் என்றே எனக்கு தெரியாது என கூறி பேட்டியை முடித்துக்கொண்டார் இளங்கோவன்.

இந்தநிலையில், ஈ.வி.கே.எஸ் என்னைத் தெரியாது என்று கூறியது நல்லது தான் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அதற்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் "ஹைட்ரோகார்பன் பிரச்சினையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் தான் தீர்வு ஏற்படும். ஈ.வி.கே.எஸ். என்னைத் தெரியாது என்று கூறியது நல்லது தான்.
என்னைத் தெரியாது என்று கூறியதால் இனிமேல் என்னை அவர் திட்ட மாட்டார். தெரிந்தவர்களைத் தான் திட்ட முடியும் தெரியாதவர்களை எப்படித் திட்ட முடியும்?
இவ்வாறு அவர் கூறினார். இதன் மூலம் முன்னாள் மற்றும் இன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் நடுவே நடைபெறும் பனிப்போர் இப்போது வீதிக்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications