ஜெ. படத் திறப்பு நிகழ்ச்சியை காங். புறக்கணிக்கும்: திருநாவுக்கரசர்
ஜெயலலிதா படத் திறப்பு நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சி நிச்சயம் புறக்கணிக்கும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: சட்டசபையில் ஜெயலலிதா படத்திறப்பு நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சி நிச்சயம் புறக்கணிக்கும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் படத்தை நாளை சட்டசபையில் திறந்து வைக்க தமிழக அரசு ஏற்பாடுகளை செய்துவருகிறது. ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் அவரது படத்தை சட்டசபையில் திறக்கக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

திமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக திமுக நீதிமன்றத்தை நாளை நாட உள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதா படத் திறப்பு விழாவில் திமுக பங்கேற்காது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துவிட்டார். இதுகுறித்து திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை திறக்க கூடாது.
இதை தொடர்ந்து தமிழக அரசு நடத்தும் ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளாது என்றும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் தெரிவித்தார். எனினும் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ விஜயதாரணி ஆகியோர் படத்தை திறப்பதில் தவறில்லை என்று கூறியிருந்தனர்.இவர்களில் விஜயதாரணி காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவார்.
அவருக்கு நேரம் கிடைத்து சென்னையிலி இருந்தால் நிச்சயம் கலந்து கொள்வேன் என்று விஜயதாரணி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications