தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் பதவியேற்றார்
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், கேவி தங்கபாலு ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் சு.திருநாவுக்கரசர் (67) கடந்த புதன்கிழமை நியமிக்கப்பட்டார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலுடன் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஜனார்தன் திவிவேதி அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில், தமிழ்நாடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கமிட்டி தலைவராக இன்று அவர் பதவியேற்றுக் கொண்டார். சென்னை சத்திய மூர்த்தி பவனில் பதவியேயேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், கேவி தங்கபாலு ஆகியோர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications