கருணாகரன் வந்தாலே சஸ்பெண்ட்டா... நெல்லை கலெக்டருக்கு எதிராக குமுறும் பிஆர்ஓக்கள்!
மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியை சஸ்பெண்ட் செய்த ஆட்சியர் கருணாகரனுக்கு எதிராக பிஆர்ஓக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
நெல்லை: நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரனுக்கு எதிராக தமிழக செய்தித்துறையின் மக்கள் தொடர்பு அதிகாரிகள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.
தமிழக அரசின் தலைமைச்செயலகம் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நிறைந்திருக்கும் செய்தி தொடர்பாளர்கள் தான் அரசின் சாதனைகளையும் அரசின் செய்தி குறிப்புகளையும் மக்களிடம் எடுத்துச்செல்லும் பணிகளை கவனிப்பவர்கள்.

இவர்களுக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் எப்போதும் நெருக்கமான தொடர்பு இருக்கும். அபப்டிப்பட்ட சூழலில், கலெக்டர் கருணாகாரன் மட்டும் பிஆர்ஓக்களோடு ஆரோக்கியமான அணுகுமுறையை கையாளுவதில்லையாம்.
தங்களை எப்போதும் எதிரி போல பாவிக்கிறார் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அவர்கள், கோவையில் இவர் கலெக்டராக இருந்த போது அங்கிருந்த தங்கராஜை பழிவாங்கினார்.
4 வருடங்களுக்கு முன்பு நெல்லை கலக்டராக பணியிடமாற்றம் செய்யப்பட்ட அவர், அங்கிருந்த பி.ஆர்.ஓ.அண்ணாவை வேறு இடம் பார்த்துக்கொண்டு போய்விடுன்னு நெருக்கடி தந்தார். இப்போ, ஆறுமுகச்செல்வியை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்.
பிஆர்ஓக்களை சஸ்பெண்ட் செய்யும் அதிகாரம் செய்தித்துறையின் செயலாளருக்குத்தான் இருக்கிறது. மாவட்ட ஆட்சியருக்குக் கிடையாது. தனக்கு கீழுள்ள பி.ஆர்.ஓ. தவறு செய்வதாக மாவட்ட ஆட்சியர் நினைத்தால், அவரை மாற்றிவிடுங்கள் அல்லது அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுங்கள் என துறையின் செயலாளருக்கு பரிந்துரை தான் பண்ண முடியும்.
சஸ்பெண்ட் செய்யும் அதிகாரம் ஆட்சியருக்குக் கிடையாது. ஆனா, இவர் அதிகாரத்தை கையிலெடுத்துக்கொள்கிறார் என குற்றம்சாட்டுகிறார்கள்.இந்த விவகாரத்தை துறையின் இயக்குநர் குமரகுருபரன் ஐ.ஏ.எஸ்.சிடம் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர் மக்கள் தொடர்பு அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications