நெல்லை, தூத்துக்குடியில் வெள்ள அபாயம்: தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் !
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் பெய்த வட கிழக்கு பருவ மழையின் தாக்கத்தினால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் பேரழிவை சந்தித்தன. வரலாறு காணாத மழையினால் ஏற்பட்ட சேதத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மக்கள் மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றன. ஆனாலும் பல இடங்களில் வீடுகளை இழந்தோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலூர் உள்ளிட்ட இடங்களில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த சில தினங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
புனேயில் இருந்து வந்துள்ள 5 குழுக்கள் நெல்லையில் முகாமிட்டுள்ளனர். உதவி கமிஷனர் குமார் ராகவேந்திரா தலைமையில் ஒவ்வொரு குழுவிலும் 45 பேர் வீதம் இரண்டு குழுக்கள் உள்ளனர். உதவி கமிஷனர் வைரவநாதன் தலைமையில் 110 பேர் கொண்ட மூன்று குழுக்கள் தூத்துக்குடி சென்றனர்.
ஒவ்வொரு குழுவும், அங்கேயே உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கூடிய எட்டு ரப்பர் படகுகள், ஆழ்கடலில் சென்று மீட்பு பணியில் ஈடுபடும் டைவ் வீரர்கள் நான்கு பேர், ஆக்ஸிசன் சிலிண்டர்கள், தற்காலிக மின்விளக்குகள் ஆகியவற்றோடு தயார் நிலையில் உள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications