திருப்பத்தூரில்.. கையில் முட்டையோடு கிளம்பிட்டாரு அஸ்லம் பாஷா.. வாணியம்பாடிக்கே வந்த அண்ணாமலை.. பலே
திருப்பத்தூர்: கடந்த ஆட்சி காலத்தில் சிறுபான்மையினர், மத்திய அரசு வேலையில் மொத்தம் 4.5 சதவீதம் பேர் இருந்தார்கள்.. ஆனால், இப்போது 10.5 சதவீதம் பேர் இருக்கிறார்கள் என்று வாணியம்பாடியில் பெருமிதம் தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள் நடைபயணம்" பெரும் எதிர்பார்ப்பை ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஏற்படுத்தி வருகிறது. மாவட்டந்தோறும், சாலையின் வழியெங்கும் அண்ணாமலைக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.. ஏராளமான பெண்களும், குழந்தைகளும் அண்ணாமலையுடன் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள்.

நடைபயணம்: இந்த யாத்திரை, வெறுமனே, ஒரு நடைபயணமாக முடிந்துவிடாமல், செல்லும் இடங்களிலெல்லாம் மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து வருகிறார் அண்ணாமலை.
அதுமட்டுமல்லாமல், மத்திய அரசின் திட்டங்களையும், அந்த திட்டங்களினால் கிடைத்த பலன்களையும், மக்களிடம் நேரடியாகவே சொல்லி வருவதுடன், திமுக அரசின் குறைகளையும் மறக்காமல், லிஸ்ட் போட்டு சொல்லியும் வருகிறார். அந்தவகையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டசபை தொகுதியில் நடைபெற்ற பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.. அப்போது அண்ணாமலை பேசியதாவது:
வாணியம்பாடி: "வாணியம்பாடியில் அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. பிரதமர் கிராமப்புற சாலை திட்டத்திற்காக, தமிழகத்திற்கு 9 ஆண்டுகளில், 5,886 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 100 சதவீதம் கிராமப்புற பகுதிகளில் சாலை அமைத்ததாக, மத்திய அரசிற்கு தமிழக அரசு அறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால், இங்குள்ள நெக்னா மலை கிராமத்திற்கு சாலை வசதி கிடையாது.
2018ல் இந்தியாவில், அதிகளவில் மாசுபட்டுள்ள நதி குறித்து, மத்திய அரசு நடத்திய கணக்கெடுப்பில், தமிழகத்தில் ஆறு நதிகள் மிகவும் மோசமாக மாசடைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதில், இங்கு ஓடிக்கொண்டிருக்கும் பாலாறும் ஒன்று.
மெத்தனால்: இங்குள்ள தோல் தொழிற்சாலைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, மத்திய அரசு மானியம் வழங்க தயாராக இருந்தும், மாநில அரசின் மெத்தனத்தால், சுத்திகரிப்பு நிலையம் கட்டி கொடுக்க முடியாத நிலைமை இருக்கிறது.. காரணம், தோல் தொழிற்சாலை கழிவுநீரால் பாலாறு மாசுபட்டுள்ளது. சுற்றுப்புற சூழல் பிரச்சனை மிகுந்த இந்த பகுதிக்கு, சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் எத்தனை முறை வந்து, மக்கள் பிரச்சனைகளை கேட்டிருக்கிறார்?
சுற்றுச்சூழல் பாதுகாப்பில், இந்தியாவில் உள்ள மாநிலங்களில், 21வது இடத்தில் தமிழகம் உள்ளது. ஆனால், சுத்தமான ஆற்று தண்ணீர் கிடைக்கக்கூடிய பட்டியலில் கடைசியிலிருந்து, 3வது இடத்தில் உள்ளது.
கதிர் ஆனந்த்: கடந்த ஆட்சி காலத்தில் சிறுபான்மையினர், மத்திய அரசு வேலையில் மொத்தம் 4.5 சதவீதம் பேர் இருந்தார்கள்.. இப்போது 10.5 சதவீதம் பேர் இருக்கிறார்கள்.. இந்த தொகுதி, திமுக எம்பி கதிர் ஆனந்த், கிங்ஸ்டன் என்ற சிபிஎஸ்இ பள்ளியை நடத்துகிறார். அங்கு தமிழ், ஆங்கிலம், இந்தி என்று 3 மொழி பாடம் உள்ளது. ஆனால், இந்திக்கு எதிர் என்று வெளியே போஸ்டர் ஒட்டுறாங்க" என்றார் அண்ணாமலை.
முன்னதாக, அண்ணாமலை, வாணியம்பாடி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம் பாஷா, தன்னுடைய ஆதரவாளர்களுடன் அண்ணாமலை மீது முட்டைகள் வீசப்போவதாக சொல்லி, கைகளில் முட்டைகளுடன் வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் அதற்குள் இந்த தகவல் வாணியம்பாடி டிஎஸ்பி-க்கு தெரியவந்தது..
முட்டைகள் எனவே, உடனடியாக அஸ்லம் பாஷாவை தேடி அவருடைய வீட்டுக்கு சென்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீசார் அவரை வெளியே செல்லவிடாமல் தடுத்தனர். அப்போது அவர், "அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கண்டிப்பாக முட்டை வீசுவேன், அதை தடுக்க கூடாது" என்று சொல்லி, கையில் வைத்திருந்த முட்டையை வீசினார் அஸ்லம் பாஷா..
அந்த முட்டை, வீட்டுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அவரது கார் கண்ணாடி மீது விழுந்தது. எனினும், அவரை போலீசார் வெளியே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி, வீட்டுக்காவலில் வைத்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
அண்ணாமலைக்குப் போகிறதா கோவை வடக்கு.. சட்டென வானதி சீனிவாசன் கொடுத்த ரியாக்ஷன் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications