விபச்சார புரோக்கர் பிரேமா.. தனி வீடு.. ஒரு நாளைக்கு ரூ.4 ஆயிரம்.. சிக்கியது எப்படி.. பரபர தகவல்கள்

விபச்சார புரோக்கராக செயல்பட்ட அதிமுக பெண் பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: ஒருநாளைக்கு 4 ஆயிரம் தருவதாக சொல்லி, 17 வயது இளம் பெண்ணை அதிமுக பிரமுகர் பிரேமா விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார்.. ஆனால் அந்த பெண்ணுக்கும் பணம் தராமல் ஏமாற்றியதால்தான்தான் பிரேமா விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை வந்துள்ளதாக கூறப்படுகிறது! அதிமுக பிரமுகரான பிரேமா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதற்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் பகுதிகளில் உள்ள லாட்ஜ்களில் நிறைய விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

லாட்ஜ்கள் தவிர, தனி வீடுகள் எடுத்தும் இந்த விபச்சாரம் நடப்பதாகவும், இதற்காகவே வெளிமாநிலங்களில் இருந்து இளம்பெண்களை அழைத்து வந்து விபச்சாரம் செய்கிறார்கள் என்று அடுத்தடுத்த தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன.

லாட்ஜ்கள்

லாட்ஜ்கள்

இதுகுறித்து உடனடியாக உயரதிகாரிகளுக்கு விஷயம் சென்றது... அதனால் ரகசிய விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில், போலீசாரும் விபச்சாரம் நடப்பதாக சொல்லப்பட்ட லாட்ஜ்கள், வீடுகளை ரகசியமாக கண்காணித்தனர்.. அப்போதுதான் சம்பந்தப்பட்ட இடங்களில் ஏராளமான இளம்பெண்கள் நடமாட்டத்தை அறிந்தனர்.

பெண் பிரமுகர்

பெண் பிரமுகர்

மேலும் இதற்கெல்லாம் காரணம் பிரேமா என்ற பெண் என தெரியவந்தது.. இவர் இதே உமாராபாத் வேப்பமர தெருவை சேர்ந்தவர்தான்... 50 வயதாகிறது.. அதிமுகவின் மாவட்ட பிரதிநிதி... உமராபாத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவரும்கூட.. இத்தனை பொறுப்புகளை வகித்த பிரேமாதான் இந்த தொழிலை நடத்தி வந்துள்ளார். இந்த தகவலையும் போலீசார் தங்களது உயரதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

இளம்பெண்கள்

இளம்பெண்கள்

அவர்களது உத்தரவுப்படியே பிரேமாவை கைது செய்ய ஆம்பூர் மகளிர் போலீசார் சென்றனர். அப்போது, பெங்களூருவை சேர்ந்த லதா 35, இன்னொரு பெண் உட்பட பாலியல் தொழிலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. போலீஸார் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்ல முற்பட்டபோது, 3 பேரும் மாறிமாறி சண்டை போட்டுக் கொண்டு வர மறுத்துள்ளனர்.. அதற்கு பிறகுதான் பெண் போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.

புரோக்கர்

புரோக்கர்

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிரேமாதான் இந்த தொழிலை நடத்தும் புரோக்கர் என்று தெரியவந்தது. மகளிர் ஸ்டேஷனில் பிரேமாவை வைத்து விசாரித்தும் வருகிறார்கள். வெளிமாநிலத்தில் இருந்து இளம்பெண்களை வரழைத்த பிரேமா, உமாராத் பகுதியில் மட்டுமல்லாது, சுற்றுவட்டார ஆம்பூர், வாணியம்பாடி, வேலூர், குடியாத்தம் போன்ற பகுதிகளுக்கும் இந்த பெண்களை அனுப்பி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

கைது

கைது

விபச்சார புகார் தொடர்பாக பெண் பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளது உள்ளூர் அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீட்கப்பட்ட பெண்களில் 17 வயது சிறுமியும் ஒருவர்... அவரை மட்டும் காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார், பிரேமா உட்பட 2 பேரை வேலூர் ஜெயிலில் அடைத்துள்ளனர். 2 வருஷமாகவே பிரேமா இந்த புரோக்கர் வேலையை செய்து வருகிறாராம்..

ரூ.4 ஆயிரம்

ரூ.4 ஆயிரம்

பாலியல் தொழில் செய்யும் சில நபர்களுடன் ஏற்பட்ட பழக்கமும், பணம் சம்பாதிக்கும் வெறியும்தான் பிரேமாவை இந்த அளவுக்கு கொண்டு வந்து விட்டுள்ளது என்கிறார்கள். இதற்காகவே வீட்டை 2 வருடமாக வாடகைக்கு எடுத்துள்ளார்.. பாலியல் தொழிலில் ஈடுபட வைக்க. அப்பெண்களை பக்காவாக பேசியே பிரெயின் வாஷ் செய்வாராம் பிரேமா. பிறகு அந்த பெண்கள் மட்டுமல்லாது, அவர்களின் பெண் குழந்தைகளையும் இந்த தொழிலில் தள்ளியுள்ள அவலமும் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒருநாளைக்கு 4,000 ரூபாய் சம்பளம் தந்துள்ளார்.

தரவில்லை

தரவில்லை

போலீசில் சிக்கிய 17 வயது இளம்பெண்ணுக்கு பிரேமா தினசரி ரூ.4 ஆயிரம் தருவதாக கூறி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார். ஆனால் கடந்த 10 நாட்களாக இந்த பெண்ணுக்கு பிரேமா பணம் தரவில்லை.. இதனால் அந்த இளம்பெண்ணின் தாயார் போலீசுக்கு தகவல் சொல்லி உள்ளார்.. அதன்பேரிலேயே பிரேமாவும் லதாவும் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போது இவர்கள் இரண்டு பேரையும் விசாரணைக்கு உட்படுத்தினால்தான் அடுத்தடுத்த பகீர் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீக்கம்

நீக்கம்

இதனிடையே, கட்சியிலிருந்தும் பிரேமா நீக்கப்பட்டுள்ளார். இது சம்பந்தமான அறிக்கையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வேலூர் மேற்கு மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியத்தைச் சேர்ந்த திருமதி.பிரேமா, (பேரணாம்பட்டு ஒன்றியக் கழக மாவட்டப் பிரநிதி) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் அவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்'' என்று உத்தரவிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+