திருப்பூரில் மோடி.. கரூர் டூ பல்லடம் போறீங்களா? அடியோடு மாறுது ரூட்.. இதை நோட் பண்ணுங்க மக்களே
திருப்பூர்: பிரதமர் மோடியின் தமிழகம் வருகையையொட்டி, நாளை 27-ந்தேதி பல்லடம் நகரில் ஒரு நாள் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நாளை செவ்வாய்க்கிழமை, பிரதமர் மோடி கலந்து கொள்ளும் "என் மண், என் மக்கள்" பாதயாத்திரை நிறைவு விழா மற்றும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பல்லடம் நகரில் நாளை ஒரு நாள் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

அறிவிப்பு: ஈரோடு மாவட்ட போலீசார், போக்குவரத்தில் இந்த மாற்றத்தை செய்துள்ளனர்.. பொதுமக்களின் நன்மைக்காக, இது தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பு இதுதான்:
"கோவையில் இருந்து கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரைக்கு செல்லும் கன்டெய்னர், டேங்கர் லாரிகள்... மற்றும் அதிக உயரமான பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் மட்டும் பெருந்துறை வழியாக திண்டல் ரிங்ரோடு வழியே ஆணைக்கல்பாளையம், முத்துகவுண்டன்பாளையம், லக்காபுரம், மொடக்குறிச்சி, விளக்கேத்தி, சிவகிரி, தாமரைபாளையம் சாலை புதுார் வழியே கரூர் செல்ல வேண்டும்.
நொய்யல் சோதனை: திருச்சி, கரூர், மதுரையில் இருந்து கோவை செல்லும் கன்டெய்னர், டேங்கர் லாரிகள் மற்றும் அதிக உயரமான பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் நொய்யல் சோதனை சாவடி, சாலை புதூர், தாமரைபாளையம், சிவகிரி, விளக்கேத்தி, மொடக்குறிச்சி, லக்காபுரம், முத்து கவுண்டன்பாளையம், ரிங்ரோடு வழியே ஆணைக்கல்பாளையம், ரங்கம்பாளையம், திண்டல் கபே, மேட்டுக்கடை, நசியனுார் வழியே தேசிய நெடுஞ்சாலை சென்று கோவை செல்லலாம்.
கோவையில் இருந்து கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை செல்லும் இலகு ரக வாகனங்கள் பெருந்துறை வழியே திண்டல் ரிங் ரோடு, ரங்கம்பாளையம், ஆணைக்கல்பாளையம், முத்து கவுண்டன் பாளையம், பரிசல் துறை 4 ரோடு, கொடுமுடி வழியே கரூர் செல்ல வேண்டும் அல்லது பெருந்துறை ஆர்.எஸ்... வெள்ளோடு, அரச்சலுார் தலவுமலை, விளக்கேத்தி, சிவகிரி, தாமரைப்பாளையம், சாலை புதுார் வழியே கரூர் செல்லலாம்.
இலகு ரக வாகனங்கள்: இலகு ரக வாகனங்கள் மதுரை, திருச்சி, கரூர், திண்டுக்கல் நகரில் இருந்து கோவைக்கு வரும் இலகு ரக வாகனங்கள் நொய்யல் சோதனை சாவடி, சாலை புதுார், தாமரைபாளையம், சிவகிரி, விளக்கேத்தி, தலவுமலை, அனுமன்பள்ளி, வெள்ளோடு, பெருந்துறை ஆர்.எஸ், பெருந்துறை வழியே தேசிய நெடுஞ்சாலை சென்று கோவை செல்லலாம்..
அல்லது நொய்யல் சோதனை சாவடி, சாலை புதுார், தாமரைபாளையம், சிவகிரி, விளக்கேத்தி, மொடக்குறிச்சி, லக்காபுரம், முத்துகவுண்டன்பாளையம், ரிங் ரோடு வழியே ஆணைக்கல்பாளையம், ரங்கம்பாளையம், திண்டல் கபே, மேட்டுக்கடை, நசியனுார் வழியே தேசிய நெடுஞ்சாலை சென்று கோவை செல்லலாம்..
அறிவிப்பு: கரூர் - பல்லடம் வழியே கோவைக்கும், கோவையில் இருந்து பல்லடம் வழியே கரூருக்கும் 27ம் தேதி ஒரு நாள் மட்டும் கன ரக வாகனங்கள், இலகு ரக வாகனங்கள் செல்லக் கூடாது" என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications