சர்ச்சையில் மற்றொரு அதிமுக எம்.பி. சத்தியபாமா....கணவர் சரமாரி புகார்- விவகாரத்து நோட்டீஸ்!!
கோபி: அதிமுகவின் திருப்பூர் லோக்சபா எம்.பி. சத்தியபாமா மீது அவரது கணவர் வாசுவே சரமாரியாக புகார் தெரிவித்துள்ளார். அத்துடன் சத்தியபாமாவுக்கு விவகாரத்து நோட்டீஸையும் அனுப்பியுள்ளார் கண்வர் வாசு.
அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக சசிகலா புஷ்பா. ஜெயலலிதா தம்மை அடித்ததாக கூறி பெரும்களேபரத்தையே ஏற்படுத்தியவர்.
தற்போது நான் நினைத்தால் தமிழக அரசியலை திருப்பிப் போடுவேன் என ஜெயலலிதாவுக்கு சவால்விட்டுக் கொண்டிருக்கிறார். இவர் மீது ஏகப்பட்ட புகார்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இதனால் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்திடம் தஞ்சமடைந்துள்ளார் சசிகலா புஷ்பா.

சர்ச்சையில் சத்தியபாமா
இதனிடையே அதிமுகவின் லோக்சபா பெண் எம்.பி. ஒருவரும் பஞ்சாயத்தில் சிக்கியுள்ளார். அதிமுகவின் திருப்பூர் எம்.பி.யான சத்தியபாமா மீது சரமாரி புகார் தெரிவித்திருப்பது அவரது கணவர் வாசுதான்...வேறு யாருமல்ல..

வக்கீல் நோட்டீஸ்
தற்போது சத்தியபாமாவுக்கு விவகாரத்து கோரி கணவர் வாசு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வழக்கறிஞர் ஜாகீர் உசேன் அனுப்பியுள்ள அந்த நோட்டீஸில் விவகாரத்துக்கான காரணங்களாக கூறப்பட்டுள்ளதாவது:

பணம்....பணம்...
கோபி நகராட்சி தலைவர் ஆன பின்னர் கணவர் வாசுவை உதாசீனப்படுத்த தொடங்கினீர்கள். கணவர் வாசுவுக்கு தெரியாமல் பல இடங்களில் அவர் பெயரில் கடன் பெற்றுள்ளீர்கள்.

கடன்கள்...
லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தபோது பலரிடம் பணம் பெற்று தங்களுக்கு வாசுதான் கொடுத்துள்ளார். அதேபோல் அவரது விவசாய நிலங்களை அடமானம் வைத்து ரூ2 கோடி பெற்றுத்தர வற்புறுத்தினீர்கள்.அதன்பின் சிகிச்சை என்ற பெயரில் அவரை அடைத்து வைத்திருக்கிறீர்கள்.

மனம்போன போக்கில்...
மனம் போன போக்கில் வாசுவை தவிர்த்து 2 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறீர்கள். இனி உங்களுடன் சேர்ந்து வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் உங்களது செயல்கள் தன் நலனுக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும் என கணவர் வாசு கருதுகிறார். ஆகையால் 1990ல் இருவருக்கும் ஏற்பட்ட திருமணத்தை ரத்து செய்ய மனு தாக்கல் செய்வதற்கு தாங்கள் முன்வர வேண்டும்.

விவகாரத்து வழக்கு...
அப்படி தவறும் பட்சத்தில் என் கட்சிக்காரரான வாசு தங்கள் மீது விவாகரத்து வழக்கு தாக்கல் செய்வார். அதனால் ஏற்படும் சகல செலவுகளுக்கும் நீங்களே முழு பொறுப்பேற்க நேரிடும். இவ்வாறுநோட்டீ

ஏன் நோட்டீஸ்?
இதுகுறித்து சத்தியபாமாவின் கணவர் வாசு கூறுகையில், என்னை ரூ1 கோடிக்கு கடன்காரன் ஆக்கியுள்ளார், தன்னிச்சையாக செயல்படுகிறார். 2 மாதமாக அவரிடம் பேச முயற்சிக்கிறேன்; பிடி கொடுக்க மறுக்கிறார். என் வாழ்க்கையை நான் தீர்மானிக்க தயாராகி விட்டேன். அதற்காகத்தான் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன், என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications