For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நைஜீரியர்களை வெளியேற்றாவிட்டால் கடையடைப்பு நடத்துவோம்.. திருப்பூர் பனியன் உரிமையாளர்கள்

Google Oneindia Tamil News

திருப்பூர்: திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கி இருக்கும் நைஜீரியர்களை வெளியேற்றாவிட்டால் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று திருப்பூர் பனியன் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

திருப்பூர் செகண்ட்ஸ் பனியன் ஓனர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று கே.எஸ்.ஆர் திருமண மண்டபத்தில் நடந்தது.

இந்தக்கூட்டத்தில், " வியாபாரத்துக்கு வந்த நைஜீரியர்கள் காதர்பேட்டையில் நீண்ட நாட்களாக முறைகேடாகத் தங்கிக்கொண்டு தொழில் செய்கின்றனர்.

Tirupur cloth firms decides to observe Bandh against Nigerians

பாதிக்கப்படும் வாழ்வாதாரம்:

இதனால் இரண்டாம் நிலை பனியன் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் தமிழ் நாட்டு மக்களுக்கான கலாசார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.

சட்ட ரீதியான பிரச்சனைகள்:

இவர்களுடனான வியாபாரத்தில் தொடர்ந்து சட்டரீதியான பிரச்சனைகள், மோசடிகள் அடிக்கடி ஏற்பட்டு சண்டைகள் என பல பிரச்னைகள் காதர் பேட்டையில் நடப்பதால் எங்களுடைய வியாபாரமும் வாழ்வாதாரம் பாதிக்கிறது.

நைஜீரியர்களின் கடை:

எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு நைஜீரியர்கள் காதர் பேட்டையில் கடை வைத்து நடத்துவதை தடுக்க வேண்டும்.

ஒரு நாள் கடையடைப்பு:

இல்லாவிட்டால் திருப்பூரிலுள்ள அனைத்து பனியன் வியாபாரிகள் சார்பில் ஒரு நாள் கடை அடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

English summary
Tirupur cloth firms have decided to hold one day Bandh in Tirupur urging the govt to evacuate the Nigerians.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X