விளையாட்டு விபரீதமானது: விசில் அடிக்க முயன்று, பேனா மூடியை விழுங்கிய மாணவன் பலி

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் அருகே விசில் அடிக்க முயன்றபோது பேனா மூடியை விழுங்கிய மாணவன் வகுப்பறையிலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி முத்துச்செட்டி பாளையத்தைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ். இவரது மகன் நவநீதன் ஜோசப் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான்.

சம்பவத்தன்று வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற ஜோசப், நண்பர்களுடன் சேர்ந்து பேனா மூடியால் விசிலடித்து விளையாடியுள்ளான். அப்போது எதிர்பாராத விதமான பேனா மூடி ஜோசப்பின் தொண்டையில் சிக்கியது.

இதனால் வலியால் துடிதுடித்த ஜோசப், மயங்கி விழுந்தான். நண்பர்கள் மூலம் தகவல் அறிந்த பள்ளி ஊழியர்கள் உடனடியாக ஜோசப்பை சிகிச்சைக்காக அவிநாசி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு ஜோசப்பை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து அதிர்ச்சியில் கதறி அழுதபடி மருத்துவமனைக்கு வந்த குழந்தையின் பெற்றோர், பள்ளி ஊழியர்களிடம் தகறாரில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தினர்.

விளையாட்டு விபரீதமானதால் பள்ளிச் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அவிநாசியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+