இப்ப என்ன அவசரம்.. உள்ளாட்சி தேர்தல் வரும்போது கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும் - வாசன்
சேலம்: உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து சட்டசபைத் தேர்தலை சந்தித்தது தமாகா. ஆனால் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது.எங்குமே டெபாசிட் கிடைக்கவில்லை. 26 இடங்களில் போட்டியிட்டு பெரும் தோல்வியே அதற்குப் பரிசாக கிடைத்தது. ஒரு சதவீத வாக்குகளைக் கூட அதனால் வாங்க முடியவில்லை. இதையடுத்து மக்கள் நலக் கூட்டணியை விட்டு வெளியேறியது தமாகா.

இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளை நாங்கள் பின்னடைவாக கருதவில்லை. மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம். வரும் காலங்களில் இதை எங்களின் பலமாக கருதி மக்கள் பணியாற்றுவோம்.
தமிழகத்தில் கொலைகள் அதிக அளவில் நடைபெற்று வருவதாக பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் தினமும் பார்த்து வருகிறோம். இது கவலை அளிப்பதாக உள்ளது. இதை தமிழக அரசும் காவல் துறையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அப்போது தான் மக்கள் மத்தியில் காவல் துறையினர் நம்பிக்கையை பெற முடியும்.
குளைச்சல் துறைமுகம் புதிதாக கொண்டு வந்ததற்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு எனது வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன். அதே போன்று தர்மபுரியில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்க நிதி ஒதுக்கியும் இதுவரை கொண்டு வரவில்லை. விரைவில் அமைக்க கேட்டுக்கொள்கிறேன். சேலத்தில் ஜவுளி பூங்காவை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேலம் மாநகரத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க விரைவில் ரிங் ரோடு அமைக்கும் பணியை தொடங்க வேண்டும். ஓமலூரில் இருந்து சங்ககிரி செல்லும் சாலை மற்றும் ஓமலூர்-மேச்சேரி செல்லும் சாலை நான்கு வழி சாலையாக மாற்றப்படும் என்று கூறி பல ஆண்டுகள் ஆகி உள்ளது. இந்த திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். கட்சியை பலப்படுத்தும் வேலையில் முக்கியமாக ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு வாசன் கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications