அதிமுக கூட்டணியில் இணையுமா த.மா.கா.? 23-ந் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு வாசனுக்கு அழைப்பு
சென்னை: கூட்டணியில் இணைவது தொடர்பாக மார்ச் 23-ந் தேதியன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு அதிமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியானது அதிமுக, மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் தொடர்ச்சியாக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை விட 1 தொகுதியாவது கூடுதலாக பெற வேண்டும் என்பது தமாகா தலைவர் வாசனின் விருப்பம்.

அத்துடன் தம்மை நம்பி வந்துள்ள மூத்த தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனவும் ஜி.கே.வாசன் கருதுகிறார். இதற்கேற்ப கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்.
அதிமுகவுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நடத்திய பேச்சுவார்த்தையில் 25 தொகுதிகளை ஜி.கே.வாசன் தரப்பு கேட்டிருக்கிறது. ஆனால் அதிமுகவோ அதிகபட்சமாக 8 தொகுதிகளைத்தான் தர முடியும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதில் வாசன் அதிருப்தி அடைந்திருக்கிறாராம். இதனால்தான் கடந்த ஞாயிறன்று கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஜெயலலிதா சந்தித்த போது வாசனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்கிறது அதிமுக வட்டாரங்கள்.
இந்த நிலையில் கூட்டணி குறித்து வரும் 23-ந் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு வாசனுக்கு அதிமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று வாசனும் ஜெயலலிதாவை சந்திக்க முடிவு செய்திருக்கிறாராம்.
அதே நேரத்தில் காங்கிரஸுக்கு இணையாக அல்லது அதைவிட கூடுதல் தொகுதிகள் கொடுக்கும் நிலையில்தான் அதிமுக கூட்டணியில் நீடிக்க முடியும் என்கிற சூழலையும் ஜெயலலிதாவிடம் தெரிவிக்கவும் வாசன் ஆலோசித்து வருவதாக தமாகா வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆகையால் வரும் 23-ந் தேதி ஜெயலலிதாவை வாசன் சந்தித்தாலும் அதிகாரப்பூர்வமாக கூட்டணி என அறிவிக்கும் வரை இழுபறி நீடிக்கவே செய்யும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications