தமாகாவிலும் வெடித்தது கலகம்... வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு- மாநிலச் செயலர்கள் போர்க்கொடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமாகா தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலச் செயலர்கள் மயிலை சத்யா, ரமேஷ்குமார் ஆகியோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இணைந்துள்ளது. இக்கூட்டணியில் தமாகாவுக்கு 26 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 26 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று ஜி.கே.வாசன் அறிவித்திருந்தார்.

TMC Secretary resigns party post

இதில் கிள்ளியூர் தொகுதியில் ஜான்ஜேக்கப் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தொகுதியில் போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயலர் ரமேஷ்குமார் விருப்பம் தெரிவித்திருந்தார்.

தற்போது ஜான்ஜேக்கப் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிருப்தி அடைந்த ரமேஷ்குமார் தமது கட்சிப் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இதேபோல் சென்னை மயிலாப்பூர் வேட்பாளராக முனவர் பாட்ஷா அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு மாநிலச் செயலரான மயிலை சத்யா கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். மேலும் அதிருப்தியாளர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன் எனவும் மயிலை சத்யா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+