உயிர் பறிக்கும் டெங்கு.. போர்க்கால அடிப்படையில் அரசு செயல்பட தமாகா கோரிக்கை
தூத்துக்குடி: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாகப் பரவி பல உயிர்களைப் பறித்து வருவதால் ஒதை ஒழிக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் யுவராஜா கூறியுள்ளார்.
தூத்துக்குடிக்கு வந்த யுவராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக டெங்குகாய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள், இளைஞர்கள் என பலர் டெங்குவினால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளனர். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுத்திடும் பணிகளை போர்க்கால அடிப்படையில் அரசு மேற்கொள்ளவேண்டும்.

ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர் வாரும் பணி என்ற பெயரில் மணல்கொள்ளை நடந்து வருகிறது. பசுமை தீர்ப்பாயம் எச்சரித்த பின்பும் மணல் கொள்ளையானது அரசின் துணையோடு நடந்து வருகிறது. தூர் வாரும் பணியில் நடந்துவரும் முறைகேடுகள் மற்றும் மணல்கொள்ளையை தமிழக அரசு உடனடியாக தடுக்காவிட்டால் வரும் நாட்களில் தமாகா சார்பில் அணையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.
தமிழகத்தில் சீன பட்டாசு விற்பனையை தடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளபோதும் போலீசாரின் துணையோடு ஆங்காங்கே சீன பட்டாசு விற்பனை நடந்து வருகிறது. இதற்கு முடிவுகட்ட சீன பட்டாசுகளை விற்பனை செய்பவர்களை கைது செய்திடவேண்டும். அரசு இதனை தீவிரமாக கண்காணித்து தடுத்திடவேண்டும்.
தமாகாவின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா வரும் 30ம் தேதி கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெறவுள்ளது என்றார். பேட்டியின்போது தூத்துக்குடி மாவட்ட தலைவர்கள் வடக்கு கதிர்வேல், தெற்கு எஸ்.டி.ஆர்.விஜயசீலன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications