சென்னை ஹைகோர்ட்டுக்கு மத்திய படை பாதுகாப்பு வழங்குவதற்கு தடை கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழகம் மனு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று செப்டம்பர் மாதம் 14-ந்தேதி போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி அறைக்குள் புகுந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றமே தாமாக முன் வந்து வழக்கை எடுத்தது.

உயர்நீதிமன்றத்தில் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு தேவையில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்தது. இதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், 6 மாத காலமாவது சோதனை அடிப்படையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்க முன் வர வேண்டும்.
இதுதொடர்பாக மத்திய- மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான பெஞ்ச், நவம்பர் 16-ந் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்; மத்திய பாதுகாப்புப் படைக்காக ரூ16 கோடியை மத்திய அரசுக்கு தமிழக அரசு செலுத்த வேண்டும். வரும் 7 நாட்களுக்குள் மத்திய அரசு கோருகிற டெபாசிட் தொகையை தமிழக அரசு செலுத்த வேண்டும்; அடுத்த 6 மாதங்களுக்கு மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்கும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு தடை கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்குவது பொருத்தமாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications