‘மக்கள் முதல்வரை’ வணங்கி பேச்சைத் தொடங்கிய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்...
சென்னை: சட்டசபையில் ஜெயலலிதாவின் இருக்கை காலியாக விடப்பட்டது, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிதியமைச்சர் இருக்கையில் அமர்ந்தது, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் மக்களின் முதல்வரை வணங்கி பேச்சை துவக்கியது என நேற்றைய சட்டசபைக் கூட்டம் களை கட்டியது.
மூன்று நாட்கள் மட்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு நேற்றிலிருந்து சட்டசபை கூட்டத் தொடர் துவங்கி உள்ளது.

முதல் நாளான நேற்று சட்டசபையில் கலந்து கொள்ள வந்த அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் முதல்வர் பன்னீர் செல்வத்தைக் கண்டு கொண்டதாகவேத் தெரியவில்லை. வழக்கம் போலவே அவர்களது பேச்சில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழே நிறைந்திருந்தது.
அமைச்சர்கள் பேசும்போது, 'மக்களின் முதல்வர் இருக்கும் திசை நோக்கி வணங்கி, பேச்சை துவக்குகிறோம்' என்றும், எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கைகளுக்கு, பதில் அளிக்கும் போது, 'உங்கள் கோரிக்கையை, மக்களின் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று, பரிசீலிக்கிறோம்' என்றும் கூறினர்.
தப்பித் தவறி கூட ஒருவரும், முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வதாகக் கூறாதது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இவர்கள் தான் இப்படி என்றால், முதல்வர் பன்னீர்செல்வம், கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளிக்கும்போது, அவரும் தன் பங்கிற்கு ஜெயலலிதாவை புகழ்ந்த பின்னரே, தன் பதிலுரையை துவக்கினார். மேலும் தன் பேச்சை துவக்கும் போது, ஜெயலலிதாவை, 'மக்கள் முதல்வர்' என்றே குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தகக்து.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications