தமிழக சட்டசபை இன்று கூடுகிறது... 22 நாட்கள் நடைபெறும்
சென்னை: தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது. இந்த கூட்டத் தொடர் 22 நாட்கள் நடைபெறும்.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நேற்று முன்தினம் நடந்த சட்டசபை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

2014-2015-ம் ஆண்டிற்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் மீதான விவாதம் நடைபெற்றது. பின்னர் மக்களவைத் தேர்தலையொட்டி சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் சபாநாயகர் கூறுகையில்,
சட்டசபை 10-ம் தேதி தொடங்குகிறது. தினமும் காலை 10 மணிக்கு சபை கூடும். விடுமுறை நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் சபை தொடர்ந்து நடைபெறும். இந்த கூட்டத் தொடர் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 22 நாட்கள் கூட்டம் நடை பெறும். இதில் மானிய கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறும்.
தினமும் கேள்வி நேரம் இடம் பெறும். முக்கிய சட்ட மசோதாக்களும் இக்கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications