தமிழக சட்டசபை நாளை கூடுகிறது... 22 நாட்கள் நடைபெறும்

தமிழக சட்டசபையி் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கி, அடுத்த மாதம் 12-ம் தேதிவரை நடைபெறவுள்ளது.
நேற்று நடந்த சட்டசபை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் இது முடிவெடுக்கப்பட்டது.
2014-2015-ம் ஆண்டிற்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பட்ஜெட் தாக்கல் மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இதையொட்டி, அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் சபாநாயகர் கூறுகையில், சட்டசபை 10-ம் தேதி தொடங்குகிறது. தினமும் காலை 10 மணிக்கு சபை கூடும். விடுமுறை நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் சபை தொடர்ந்து நடைபெறும்.
இந்த கூட்டத் தொடர் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 22 நாட்கள் கூட்டம் நடை பெறும். இதில் மானிய கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறும்.
தினமும் கேள்வி நேரம் இடம் பெறும். முக்கிய சட்ட மசோதாக்களும் இக் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் என்றார் சபாநாயகர்.


Click it and Unblock the Notifications
