9 நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் இன்று சட்டசபை கூடியது
சென்னை: சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடுக்காக விடுமுறை விடப்பட்ட தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியுள்ளது.
2015-2016-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட், கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர், பட்ஜெட் மீதான விவாதமும், முதல்வரின் பதில் உரையும் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதியுடன் சட்டசபை நிகழ்வுகள் முடிவுக்கு வந்தன. துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதம் அப்போது நடைபெறவில்லை.

இந்த நிலையில், ஜெயல்லிதா மீண்டும் முதல்வரான பின்னர் தமிழக சட்டசபை கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி கூடியது. அடுத்த நாள் முதல் மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வந்தது. கடந்த 4ம் தேதி வரை 9 நாட்கள் சட்டசபை கூட்டம் நடந்து முடிந்திருந்தது. இதில் எதிர்கட்சியினர் வெளிநடப்பும் முக்கிய அம்சமாக இடம்பெற்றது.
இந்த நிலையில், சென்னை வர்த்தக மையத்தில் கடந்த 9, 10ம் தேதிகளில் 2 நாட்கள் நடைபெற்ற உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு முன்னிட்டு, சட்டசபைக்கு 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. அதன் பிறகு, சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடியுள்ளது.
மானியக்கோரிக்கை விவாதம்
இன்றைய கூட்டத்தில், வருவாய் துறை, இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.
முதல்வருக்கு பாராட்டு
வழக்கம் போல் இன்றைய கூட்டமும் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது. அதன்பிறகு, உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.2.42 லட்சம் கோடி தொழில் முதலீட்டை கொண்டு வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்படும் என தெரிகிறது.
அமைச்சர்கள் பதில்
தொடர்ந்து நடைபெறும் 3 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில், ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பதில் அளித்து பேசுகிறார்கள். இறுதியில் தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிட்டு பேசுகின்றனர். தொடர்ந்து நடைபெறும் சட்டசபை கூட்டம், வரும் 29ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications