தமிழக சட்டசபை தேர்தல் செலவு ரூ.210 கோடி, விளம்பரத்திற்கு ரூ.25 கோடி: ராஜேஷ் லக்கானி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை நடத்த ரூ. 210 கோடி செலவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழக சட்டதபை தேர்தலை நடத்த ரூ.210 கோடி செலவானது. தேர்தல் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மட்டும் ரூ.25 கோடி செலவு செய்யப்பட்டது. வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் செலவு கணக்கை வரும் ஜூன் மாதம் 19ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. மரணம் அடைந்தது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தலுடன் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையும் சேர்த்து நடத்த வாய்ப்பு உள்ளது.
சமூக வலைதளங்களில் தலைவர்கள் பிரச்சாரம் செய்தது குறித்து விசாரணை நடத்தப்படும். குறைவான அளவில் வாக்குப்பதிவு நடந்த இடங்களில் ஆய்வு செய்யப்படும். அடுத்த தேர்தலில் 100 சதவீத வாக்குகளை பெற முயற்சி செய்யப்படும்.
அடுத்த தேர்தலில் தனியார் இடங்களிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். தேர்தல் நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.105.2 கோடியில் ரூ. 47.44 லட்சம் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications