வரும் சட்டசபையில் மொத்தமே 4 கட்சிதான் - அதிமுக, திமுக , காங்கிரஸ், பாமக!
சென்னை: தமிழக சட்டசபை வித்தியாசமானதாக இருக்கப் போகிறது இந்த முறை. மொத்தமே நான்கு கட்சிகள்தான் சட்டசபைக்குள் நுழையப் போகின்றன.
தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் எடுத்த எடுப்பிலேயே அதிமுக முன்னணிக்குப் போய் விட்டது. தொடர்ந்து அது முன்னணியில் இருந்து வருகிறது.

இந்தத் தேர்தலில் 6 முனைப் போட்டி நிலவியது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள முடிவுகளைப் பார்த்தால் அது வெறும் 3 முனைப் போட்டியாக மட்டுமே காணப்படுகிறது. அதிமுக, திமுக கூட்டணிகள் மற்றும் பாமக மட்டுமே இந்தத் தேர்தலில் பலன் அடைந்துள்ளன. மற்றவற்றை மக்கள் நிராகரித்துள்ளனர்.
இதன் மூலம் இந்த சட்டசபையில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகள் மட்டுமே நுழையும் நிலையில் உள்ளன. நடப்பு சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள தேமுதிக ஒரு இடத்தில் கூட முன்னணியில் இல்லை. அதேபோல விடுதலைச் சிறுத்தைகள், பாஜக போன்றவற்றுக்கும் மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை.
இதன் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழக சட்டசபை மிகக் குறைந்த கட்சிகளை மட்டுமே உறுப்பினராக காணவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவரை இந்த அளவுக்கு குறைந்த கட்சிகளை தமிழக சட்டசபை கண்டதில்லை என்பதும் முக்கியமானது.
-
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ்












Click it and Unblock the Notifications