உரிமை மீறல்: கருணாநிதிக்கு கண்டனம் மட்டுமே.. நடவடிக்கையில்லை- சபாநாயகர்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மீது கொண்டு வரப்பட்ட உரிமை மீறல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் அவர் மீது கண்டனம் தெரிவித்ததோடு சட்டசபை நிறுத்திக் கொண்டது. நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
முன்னதாக அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் கொண்டுவந்த உரிமை மீறல் தீர்மானம் நிறைவேறியது. அமைச்சர் பேசாததை பேசியதாக குறிப்பிட்டதாக கருணாநிதிக்கு சபாநாயகர் தனபால் கண்டனம் தெரிவித்தார். எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளில் உறுப்பினர்கள் ஈடுபடக் கூடாது என்று கூறிய சபாநாயகர், கருணாநிதியின் வயதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் வீட்டு வசதி மற்றும் வேளாண்மை துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. இந்த விவாதத்துக்கு அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் பதில் அளித்தார். அப்போது அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் சில ஆட்சேபனையான கருத்துக்களை தெரிவித்ததாக கருணாநிதி புகார் கூறி இருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை முரசொலி இதழில் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் சட்டசபையில் தான் பேசாத விஷயங்களை பேசியதாக கருணாநிதி அறிக்கையில் கூறி இருப்பதாகவும் அவர் மீது அவை உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வருவதாகவும் கடந்த செப்டம்பர் 4ம்தேதி சபாநாயகர் தனபாலிடம் அமைச்சர் வைத்திலிங்கம் கடிதம் கொடுத்திருந்தார்.
இந்த பிரச்சனை உரிமைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து இந்த விவர அறிக்கையை புத்தகமாக அச்சிட்டு சட்டசபையில் இன்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்தார்.
அப்போது திமுக தலைவர் கருணாநிதி மீதான உரிமைக்குழு பேரவை உரிமைக்குழு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக அமர்ந்து அவர்கள் முழக்கமிட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து தமிழக சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதையடுத்து வெளியேற்றப்பட்டனர்.
திமுக தலைவர் கருணாநிதி மீது கொண்டு வரப்பட்ட உரிமை மீறல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் கொண்டுவந்த உரிமை மீறல் தீர்மானம் நிறைவேறியது. அமைச்சர் பேசாததை பேசியதாக குறிப்பிட்டதாக கருணாநிதி சபாநாயகர் தனபால் கண்டனம் தெரிவித்தார். எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளில் உறுப்பினர்கள் ஈடுபடக் கூடாது என்று கூறினார். மேலும், கருணாநிதியின் வயதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படாமல் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications