தமிழக சட்டசபை கூட்டம் இன்று நடைபெறாது- திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு!
சென்னை: தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் நடைபெறாது என்றும் இன்றைய அலுவல்கள் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நடத்தி வரும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் சட்டசபை நிகழ்ச்சிகளை ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில் சட்டசபை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அரசின் மேகதாது திட்டம் உள்பட தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு தலையிட்டு தடுக்கக்கோரி தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக சட்டசபையில் அரசின் தனித் தீர்மானம் நேற்று கொண்டுவரப்பட்டு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தின் மீது பேசிய தி.மு.க.வின் துரைமுருகன், ஒரு அரசு முழு அடைப்புப் போராட்டம் நடத்தினால் அது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. ஆனால் அ.தி.மு.க. பங்கேற்கலாம். 28-ந்தேதி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சூழ்நிலையில் எம்.எல்.ஏ.க்கள் நாம் காரில் போய்க் கொண்டிருப்பது நியாயமாக இருக்காது. எனவே சட்டசபையை அந்த ஒரு நாள் மட்டும் ஒத்திவைக்க வேண்டும். விவசாயிகளின் போராட்டத்தை மானசீகமாக ஆதரிக்கிறோம் என்பதை தெரிவிக்கும் வகையில் 28-ந்தேதி அவை கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும். அது விவசாயிகளின் போராட்டத்துக்கு இந்த மாமன்றம் காட்டுகின்ற மரியாதை என்றார்.
சட்டசபையில் நேற்றைய நிகழ்வுகள் பிற்பகலில் முடிந்ததும் சபாநாயகர் ப.தனபால், பேரவை மறுநாள் (28-ந்தேதி) காலை 10 மணிக்கு கூடும் என்று அறிவித்தார். இந்த நிலையில் சட்டசபை செயலாளார் அ.மு.பி.ஜமாலுதீன் அறிவிப்பு ஒன்றை நேற்று இரவு வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
சட்டமன்ற அலுவல் ஆய்வுக் குழு உறுப்பினர்கள், மாண்புமிகு பேரவைத் தலைவரிடம் தெரிவித்த கருத்திற்கிணங்க, பேரவை விதி 26(2)-ன் கீழ், 28-3-15 நடைபெறுவதாக இருந்த கூட்டத்தை ஒத்திவைத்து, அன்றையதினம் எடுத்துக்கொள்வதாக இருந்த அலுவல்கள் 30-3-2015 அன்று எடுத்துக் கொள்ளப்படும்.
30-3-15 மற்றும் 31-3-15 ஆகிய நாட்களில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய அலுவல்கள் முறையே 31-3-15 மற்றும் 1-4-15 ஆகிய நாட்களில் எடுத்துக் கொள்ளப்படும். அடுத்த பேரவை கூட்டம் 30-3-15 அன்று காலை 10 மணிக்கு கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று சட்டசபை கூட்டம் முடிந்து வெளியே வந்த தி.மு.க. உள்ளிட்ட கட்சி தலைவர்கள், முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்துகொள்ளப்போவது இல்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
நீலகிரி அரசு ஊழியரை மயக்கிய இளம் பெண்.. ஒரே நாளில் 20 லட்சம் சம்பாத்தியம்.. ட்விஸ்ட் -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் கேம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ அப்டேட்.. நோட் பண்ணுங்க -
இஸ்ரேலை நோக்கி.. செஜில் வகை ஏவுகணைகளை வீச தொடங்கியது ஈரான்! ரொம்ப கஷ்டம்! -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
டெல்லிக்கு பறக்கும் விஜயகாந்த் மச்சான்.. ஒரே கையெழுத்தில் மாறிய தலையெழுத்து! காங்கிரஸுக்கு கல்தா! -
ஓபிஎஸ் வந்து.. 1 வாரம் கூட ஆகலியே.. அதற்குள் அதிரும் அறிவாலய கதவுகள்.. திமுகவில் ஏடாகூட பிரச்சனை! -
சிதம்பரம் மூலம் ஸ்டாலினுக்கு ராகுல் அனுப்பிய மெசேஜ்.. சிக்கலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி -
திமுக ஆதரவாளர்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்ற ராகுல் முடிவு? புதிய தலை யார்? -
உளவுத்துறையை விட மோசம்.. சங்கீதா, சஞ்சய் போட்ட போடு.. அப்படியே அடங்கிய விஜய்.. இப்படி வேற நடக்குதா? -
ஜிகே வாசனுக்கு நோ.. அன்புமணி, தம்பிதுரையை ராஜ்ய சபா அனுப்பும் அதிமுக.. எடப்பாடி பழனிசாமி முடிவு? -
ஈரோட்டில் ஆசை ஆசையாய் அப்பாவின் சொத்தை மாற்ற போன தினேஷ்.. அரசு ஊழியருக்கு ட்விஸ்ட் -
Gold Price: தங்கம், வெள்ளி விலை தாறுமாறாக சரிய போகுது.. சர்வதேச சந்தையில் நடந்த எதிர்பாரா ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications