அந்தமான் அருகே தோணியுடன் மாயமான தூத்துக்குடிக்காரர்: மீட்க கோரி மனைவி கண்ணீர்
தூத்துக்குடி: அந்தமான் கடல் அருகே தோணியுடன் மாயமான மீனவரை மீ்ட்கக் கோரி அவரது மனைவி தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
தூத்துக்குடியை சேர்ந்த அன்னை வேளாங்கண்ணி என்ற பெயருடைய தோணி அந்தமான் துறைமுகமான போர்ட்பிளேயரில் இயங்கி வருகிறது. இதில் மாலுமியாக தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவரும் மற்றும் பணியாளர்களாக அந்தமானை சேர்ந்த 6 பேரும் இருந்துள்ளனர்.

இதில் தூத்துக்குடியை சேர்ந்த கைத்தான் என்ற டிரைவரும் இருந்தார். இந்த நிலையில் இந்த தோணி கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி போர்ட்பிளேயரில் இருந்து 200 டன் ஜல்லி கற்களை ஏற்றிக் கொண்டு நிகோபார் தீவுக்கு புறப்பட்டது. அங்கிருந்து 80 கடல் மைல் தொலைவுள்ள கார் நிகோபார் தீவை தோணி 22 மணி நேரத்தில் சென்றடைவது வழக்கம். இந்நிலையில் 35 மணி நேரத்திற்கு மேலாகியும் தோணி சென்று சேரவில்லை.
இதனால் அந்தமான் கடலோர காவல் படையினர் தோணியை ஹாடபே கடல் பகுதியில் தேடி பார்த்தனர். தோணி குறித்த எந்த தகவலும கிடைக்கவில்லை. இந்த நிலையில் இரண்டு மாத காலம் ஆகியும் ஹெலிகாப்டர் மூலம் தேடியும் தோணி மாயமானது குறித்து எந்த தகவலும் இல்லை.
இதனால் அதில் சென்ற தொழிலாளர்களின் குடும்பத்தினர் கலக்கத்தில் உள்ளனர். அவர்களை அருகில் வசிக்கும் ஆதிவாசிகள் அல்லது கொள்ளையர்கள் கடத்தி சென்றிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த கைத்தானை மீட்டு தரக் கோரி அவரது மனைவி தூத்துக்குடி கலெக்டர் அலுவலத்தில் குடும்பத்துடன் வந்து கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications