நிர்மலா சீதாராமனை புறக்கணிக்கிறதா தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம்?
நிர்மலா சீதாராமன் டேக் செய்தும் அவற்றை தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் பெரும்பாலும் ரீ ட்வீட் செய்வதில்லை.
சென்னை: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதை நிர்மலா சீதாராமன் தொடர்ந்து தம்முடைய ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டும் டேக் செய்தும் கூட தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இதை ரீ ட்வீட் செய்வதில் அவ்வளவாக ஆர்வம் காட்டாதது சர்ச்சையாகி உள்ளது.
மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் ஆய்வு, தலித்துகளுடனான உரையாடல், தலித் கிராமங்களில் ஆய்வு என பல நிகழ்ச்சிகளில் நிர்மலா சீதாராமன் பங்கேற்று வருகிறார். இவற்றை தம்முடைய ட்விட்டர் பக்கங்களில் படங்களுடன் வெளியிட்டு வருகிறார் நிர்மலா சீதாராமன்.

அத்துடன் @DrTamilisaiBJP , @BJP4TamilNadu ஆகிய ட்விட்டர் அக்கவுண்ட்டுகளுக்கும் நிர்மலா சீதாராமன் டேக் செய்தும் வருகிறார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இவற்றை தம்முடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரீ ட்வீட் செய்திருக்கிறார்.
ஆனால் தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமான @BJP4TamilNadu 'கடனுக்கு' நாங்களும் ரீ ட்வீட் செய்ததாக பதிவு செய்திருக்கிறது. அதே நேரத்தில் @BJP4TamilNadu ட்விட்டர் பக்கத்தைப் பார்த்தால் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் அதிகாரப்பூர்வ பக்கம் போல அவரது அத்தனை நிகழ்ச்சிகளும் ஒன்றுவிடாமல் ரிட்வீட் செய்யப்பட்டிருக்கிறது.
தமிழக பாஜகவின் தலைவர்கள் அத்தனை பேரும் ஆளுக்கு ஒரு திசையில் பயணிக்கின்றனர். இந்த அக்கப்போருக்கு முடிவு கட்ட முடியாமல் டெல்லி மேலிடம் திணறிக் கொண்டிருக்கிறது.
தற்போது தமிழக பாஜக தலைவராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்படலாம், தமிழக பாஜகவின் முதல்வர் வேட்பாளரும் அவரே என கூறப்பட்டு வருகிறது. இந்த பேசப்படுகிறபோது அவருக்கு எதிரான கோஷ்டி மனப்பான்மையைத்தான் இந்த ட்விட்டர் புறக்கணிப்புகள் வெளிப்படுத்துகின்றன என்கின்றன கமலாலய வட்டாரங்கள்.
-
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
“ரூ.10 எக்ஸ்ட்ரா கொடுக்க வேண்டியிருக்கும்..” பெட்ரோல் விலை குறித்து வாயை விட்ட நிர்மலா சீதாராமன் -
கற்பனைக்கு எட்டாத உச்சத்தில் விலைகள் உயர்வு.. நிர்மலா சீதாராமன் சொன்ன மேஜர் விஷயம் -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications