சுவாதி கொலையை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்.. ஜெயலலிதாவை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: தமிழிசை ஆவேசம்
சென்னை: இன்போசிஸ் ஊழியல் சுவாதி கொலையை கண்டித்து பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று அக்கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர். சுவாதி கொலைக்கு நீதி கேட்டும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பேசிய தமிழிசை "தமிழகத்தில் குற்றங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறிவருகிறார். காவல்துறை வழக்கு பதிவு செய்யாமல் விட்டால், வழக்குகள் எண்ணிக்கை குறைந்ததை போல காண்பிக்க முடியும்.
பதிவான 90 சதவீத வழக்குகளில், குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்று ஹைகோர்ட்டே கூறியுள்ளது. தமிழகம் அமைதி பூங்காவாக விளங்குகிறது என்று கூறிவரும், முதல்வர் இதற்கு, பதில் சொல்ல வேண்டும். அதுவரை தமிழ்நாட்டில் எந்த ஒரு பெண்ணும் ஜெயலலிதாவை மன்னிக்க மாட்டார்கள்.
சுவாதி நடத்தை குறித்து ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் கண்டதையும் எழுத கூடாது. தனது மகளுக்கு நேர்ந்ததை போன்ற கொடுமை வேறு எந்த பெண்ணுக்கும் நேரக்கூடாது என்று கூறி, சுவாதியின் தந்தை, குலுங்கி குலுங்கி அழுகிறார். அவரது கண்ணீருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications