''சென்னை சே.. பொன்னார் ஆராஹு''...மோடிக்காக பிரச்சாரம் செய்ய கிளம்பும் தமிழக பாஜக தலைவர்கள்!
சென்னை: பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி போட்டியிடும் வாரனாசி மற்றும் வதோதராவில் அவருக்கு வாக்கு சேகரிக்க தமிழக பாஜக தலைவர்கள் செல்கிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி வாரனாசி மற்றும் வதோதரா ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய தமிழக பாஜக தலைவர்கள் வாரனாசி மற்றும் வதோதராவுக்கு செல்கிறார்கள்.
தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் வாரனாசியில் கோவை பாஜக வேட்பாளரும், முன்னாள் மாநில தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் பிரச்சாரம் செய்யவிருக்கிறார். அவருக்கு இந்தி மற்றும் ஆங்கிலமும் தெரியும் என்பதால் பிரச்சாரம் செய்வதில் சிக்கல் இல்லை.

சிவகங்கை பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா வதோதரா பகுதியில் மோடிக்காக வாக்கு சேகரிக்கவிருக்கிறார். ராஜா இந்தியில் சரளமாக பேசுவார். அவர்கள் தவிர பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், இல. கணேசன், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் பிரச்சாரத்திற்கு செல்கிறார்கள்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதியில் களத்தில் இருக்கும் பாஜக வேட்பாளரான நடிகை ஸ்மிரிதி இரானிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் அமேதி சென்றுள்ளார். அங்கு அவர் ஸ்மிரித்திக்கு வாக்கு சேகரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications