இல. கணேசன், லட்சுமணன்.. ஆளுநராக தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள்?
சென்னை: தமிழக பாரதிய ஜனதாவுக்கு மதிப்பளிக்கும் வகையில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சிலருக்கு ஆளுநர் பதவிகளைக் கொடுக்க மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு எந்த ஒரு செல்வாக்கும் இல்லை. இங்கு இருக்கிற மிகச் சிறு கட்சிகளில் பாரதிய ஜனதாவும் பத்தோடு பதினொன்றுதான்..

ஆனால் தமிழகத்தில் பெரும் செல்வாக்குடன் பா.ஜ.க. இருப்பதாக நம்பிக் கொண்டு டெல்லி மேலிடத்துக்கு தகவல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. லோக்சபா தேர்தலில் இதற்காக மெகா கூட்டணியெல்லாம் அமைத்தார்கள்.
ஆனால் போணியானது பொன். ராதாகிருஷ்ணன் ஒருவர்தான்.. அவர் மத்திய அமைச்சராகிவிட்டார்.. சரி மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடக்கும் போது மாநிலத் தலைவராகிவிடலாம் என முட்டி மோதினர் மூத்த தலைவர்கள்.. கடைசியாக தமிழிசைக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைத்தது..
அதன் பின்னர் ராஜ்யசபா எம்.பி. பதவி உட்பட ஏதாவது ஒரு பதவி கிடைத்திடாதா? என மாங்கு மாங்கென மல்லுக் கட்டிக் கொண்டும் டி.வி.,க்களில் பேசிக் கொண்டிருந்தனர் அக்கட்சியினர்.. இவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மத்திய அரசு வழக்கறிஞர் பதவி உட்பட ஒன்றிரண்டும் கிடைத்துவிட்டன..
இருப்பினும் லட்சுமணன். இல. கணேசன் போன்ற சீனியர்கள் எங்கேயே ஒரு மாநிலத்துக்கு ஆளுநராகவாவது நியமியுங்கள் என்கிற வகையில் சில லாபிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதெல்லாம் சாத்தியமா எனத் தெரியவில்லை என்று தகவல் வந்த கையோடு போனால் போகட்டும் என இருவரையும் பரிந்துரைத்து தமிழக பா.ஜ.க., டெல்லி மேலிடத்துக்கு கடிதத்தையும் அனுப்பி வைத்துள்ளதாம்..
இலவுகாத்த கிளிகள்?
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications