தமிழகத்தில் 4-வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் நீடிப்பு- குறைவான பேருந்துகளே இயக்கம்!
தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் இன்று 4-வது நாளாக நீடிக்கிறது.
சென்னை: தமிழகத்தில் 4-வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நீடிப்பதால் குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டதில் குதித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பேருந்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அனைத்து இடங்களில் மிகவும் குறைவான பேருந்துகள் தற்காலிக ஓட்டுநர்களைக் கொண்டே இயக்கப்படுகின்றன. இதனால் ரயில்கள், தனியார் பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த வேலை நிறுத்தத்தைப் பயன்படுத்தி தனியார் பேருந்துகள், ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால் பெரும்பாலான பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதனிடையே போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் போராட்டத்தை கைவிட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்புமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதனை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன.
இந்நிலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு விளக்கம் கேட்டு போக்குவரத்து கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அத்துடன் தற்காலிக பணியாளர்க்களை முழு வீச்சில் பயன்படுத்தி அரசு பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications