தமிழகத்தில் அமைகிறது 'சியட்' டயர் தொழிற்சாலை.. அமைச்சரவை ஒப்புதல்
மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை: மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் சியட் (CEAT) டயர் தொழிற்சாலை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
மத்திய அரசின் சகல மருத்துவ வசதிகளும் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் மதுரையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தோப்பூரில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.

இந்த மருத்துவனைக்கு தமிழக அரசு சார்பாக மின்சாரம், தண்ணீர் வசதி, பேருந்து வசதி ஆகியவை அளிக்கப்பட வேண்டும். இதற்காக இன்னும் சில விதிமுறைகளை மத்திய அரசு தமிழகத்திடம் அளித்துள்ளது.
இதுகுறித்து விவாதம் செய்ய சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சுமார் ஒரு மணி நேரம் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அளிக்கப்பட வேண்டிய வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் தமிழகத்தில் சியட் (CEAT) டயர் தொழிற்சாலை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தமிழகத்தில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் சர்க்கரை ஆலைகளை தனியாருக்கு வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் மதுபான விலைகளை உயர்த்துவது குறித்தும் அமைச்சரவையில் ஆலோசனை நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications