சட்டசபைக் கூட்டத்தை எப்படி நடத்துவது.. இன்று அவசர அமைச்சரவைக் கூட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று மாலை 4.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Cabinet meets tomorrow for 6th time

வரும் 14ம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில், அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டசபைக் கூட்டத் தொடரில் விவாதிக்கப்படும் பொருள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதே வேளையில், தற்போது அதிமுக கட்சிக்குள் நிலவும் பிரச்சனை, குறிப்பாக தினகரன் பிரச்சனை, தங்போது புயலை கிளப்பியுள்ள கூவத்தூர் பேர விவகாரம், ஆகியவற்றை எப்படி கையாள்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கடந்த வாரம் 5வது முறையாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இன்று 6வது முறையாக அமைச்சரவை கூட உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TN Cabinet meeting will be held at 4.30 pm tomorrow.
Please Wait while comments are loading...