மே 5 முதல் "பூத் சிலிப்" வழங்கப்படும் - ராஜேஷ் லக்கானி தகவல்
சென்னை: சட்டசபை தேர்தலில் பட்டியலில் பெயர் உள்ள வாக்காளர்களுக்கு வரும் 5-ஆம் தேதி முதல் "பூத்-சிலிப்' வழங்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளை கண்காணிக்க 124 பார்வையாளர்கள் ஏற்கெனவே பணியாற்றி வருகின்றனர். அவர்களுடன் கூடுதலாக 42 பார்வையாளர்கள் வந்துள்ளனர்.

சட்டசபை தேர்தலில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 58 ஆயிரத்து 761 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு "பூத்-சிலிப்'கள் வீடு-வீடாக வழங்கப்படும். இந்தப் பணி வரும் 5-ஆம் தேதி தொடங்கும்.
தேர்தலில் போட்டியிடும் வாக்காளர்கள் தங்களது செலவுக் கணக்குகளை மூன்று நாள்களுக்கு ஒருமுறை தாக்கல் செய்ய வேண்டும். அரசு ஊழியர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 97 சதவீத அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டுக்கான சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
வாக்குப் பதிவின் போது ஆண், பெண்களுக்கு தனி வரிசை உருவாக்கப்படும். நடிகர்-நடிகைகள் போன்ற பிரபலங்களுக்கு தனி வரிசை ஏதும் கிடையாது. மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு வரிசை ஏதுமில்லை. அவர்கள் நேராகச் சென்று தங்களது வாக்குகளைச் செலுத்தலாம்.
சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளன. உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட வகையில் ரூ.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், வருமான வரித் துறையினர் பிடித்த தொகை ரூ.24 கோடியாகும் என்றார் ராஜேஷ் லக்கானி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications