For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் முதல்வரின் பயண திட்டம் திடீர் ரத்து

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதாக இருந்த தமிழக முதல்வரின் பயண திட்டம் திடீர் என்று கைவிடப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதாக இருந்த தமிழக முதல்வரின் பயண திட்டம் திடீர் என்று கைவிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இரண்டு வாரம் முன்பு நடந்த பேரணியின் போது போலீஸ் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த தாக்குதல் காரணமாக, இதுவரை 13 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

TN CM cancels his plan to visit victims of Tuticorin Shooting

இந்த துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை பல கட்சி தலைவர்கள் சென்று சந்தித்தனர். கடந்த மே 28-ஆம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். அவர்களிடம் ஆறுதல் கூறினார்.

ஆனால் முதல்வர் சம்பவ இடத்துக்கு செல்லாதது விமர்சனத்துக்குள்ளானது. அவர் இன்று வரை பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க செல்லவே இல்லை. இந்த நிலையில் இன்று இல்லை நாளை அவர் தூத்துக்குடி செல்ல இருப்பதாகே கூறப்பட்டது. இதற்கான பயண திட்டம் வகுக்கப்பட்டது.

ஆனால் தற்போது தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதாக இருந்த தமிழக முதல்வரின் பயண திட்டம் திடீர் என்று கைவிடப்பட்டுள்ளது.தமிழக முதல்வர் பழனிசாமி தூத்துக்குடி செல்லும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி தூத்துக்குடி செல்லும் திட்டம் இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

English summary
Tamil Nadu Cheif Minister Edappadi Planisamy cancels his plan to visit victims of Tuticorin Shooting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X