நவீன வசதிகளுடன் 135 போலீஸ் ரோந்து வாகனங்கள்: ஜெயலலிதா கொடியசைத்து தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெருநகர காவல் துறையினரின் ரோந்துப் பணிக்கு 8 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 135 புதிய மாருதி ஜிப்சி வாகனங்களை முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்புதிய மாருதி ஜிப்சி ரோந்து வாகனங்களில் நவீன மின்னணு அறிவிப்பு பலகைகள், தொலைத் தொடர்பு கருவிகள் மற்றும் இதர நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சென்னை மாநகர காவல் துறையின் பயன்பாட்டிற்காக 225 இன்னோவா மற்றும் பொலிரோ ரோந்து வாகனங்களையும், 403 இருசக்கர ரோந்து வாகனங்களையும் முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே வழங்கியுள்ளார்.

ரோந்து வாகனங்கள்

ரோந்து வாகனங்கள்

சென்னை மாநகரின் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் சென்னை பெருநகர காவல்துறையினர் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள குறுகிய சக்கர அமைப்பு கொண்ட 135 வாகனங்கள் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் கடந்த ஆண்டு அறிவித்தார்.

ஜெயலலிதா தொடக்கம்

ஜெயலலிதா தொடக்கம்

அதன்படி, சென்னை பெருநகர காவல் துறையினரின் ரோந்துப் பணிக்கு 8 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 135 புதிய மாருதி ஜிப்சி வாகனங்களை முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நவீன வசதிகள்

நவீன வசதிகள்

இப்புதிய மாருதி ஜிப்சி ரோந்து வாகனங்களில் நவீன மின்னணு அறிவிப்பு பலகைகள், தொலைத் தொடர்பு கருவிகள் மற்றும் இதர நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ரோந்து வாகனங்கள்

ரோந்து வாகனங்கள்

135 மாருதி ஜிப்சி ரோந்து வாகனங்களுடன் சேர்த்து சென்னை பெருநகர காவல்துறையில் தற்போது 360 நான்கு சக்கர ரோந்து வாகனங்களும், 403 இருசக்கர ரோந்து வாகனங்களும் செயல்பாட்டில் உள்ளன.

தலைமைச் செயலகத்தில்

தலைமைச் செயலகத்தில்

நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், (ஓய்வு), உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அசோக் குமார், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ், மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+