அரசியல் ஆதாயத்துக்கான சி.ஏ.ஏ. குறித்த பொய் பிரசாரம், விஷம செயல்களை புறந்தள்ளுங்கள்: ஈபிஎஸ்-ஓபிஎஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியல் ஆதாயத்துக்காக பரப்பப்படும் சி.ஏ.ஏ. குறித்த பொய் பிரசாரம் மற்ற்ம் விஷம செயல்களை சிறுபான்மை மக்கள் புறந்தள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஷாகீன் பாக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து 2 மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

TN CM Edappadi Palanisamy appeals to Muslims on CAA

இதே பாணியில் தமிழகத்திலும் தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்போராட்டக்காரர்களின் ஒற்றை கோரிக்கை. சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான். ஆனால் தமிழக அரசு இதனை நிராகரித்துள்ளது.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இருவரும் இன்று கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் தமிழக அரசு, இஸ்லாமியர்களுக்கு செய்து வரும் நிதி உதவிகள் உள்ளிட்ட அறிவிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அத்துடன் விஷமப் பிரச்சாரங்களை செய்து சுயலாபம் அடைய சதி திட்டம் தீட்டுவோரிடம், சிறுபான்மை மக்கள் விழிப்பாகவும், கவனமாகவும் இருக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறோம்; சிறுபான்மை சமூக மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக கழகம் எப்போதும் செயல்படும் என்றும் அதில் இருவரும் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் வெளியிட்ட அறிக்கை:

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+