ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி
திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எட்ப்பாடி கே.பழனிசாமி வாக்கு சேகரித்தார். ஆரணி தொகுதியில் அதிமுக வேட்பாளரும், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரனை ஆதரித்து ஆரணியில் வாக்கு சேகரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
Recommended Video
திருவண்ணாமலை மாவட்டம் மிகபெரிய மாவட்டமாகும். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆரணி மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையான ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருக்கப்படும்.

நெசவாளர்கள் நலவாரியம்
ஆரணி பகுதியில் அதிக அளவில் விசைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். விசைத்தறி நெசவாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும். நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டித்தரப்படும்.

முதன்மை மாநிலம்
தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக உள்ளது. அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறி உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அதிமுக ஆட்சியில் தான் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம், புதிய வருவாய் கோட்டம், மின் பகிர்மான வட்டம், வட்டார போக்குவரத்து அலுவலகம் உருவாக்கப்பட்டன.

கருணாநிதி குறுக்குவழி
திமுக ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் மக்களிடம் மனு வாங்காமல் தற்போது மக்களை ஏமாற்றுவதற்கு ஸ்டாலின் மனு வாங்கிவருகிறார். பேரறிஞர் அண்ணா மறைந்த போது முதல்வராக வரவேண்டியவர் நாவலர் நெடுஞ்செழியன். ஆனால் அன்று கருணாநிதி குறுக்கு வழியில்தான் முதல்வரானார். நான் குறுக்கு வழியில் முதல்வராகவில்லை. அதிமுக எம்.எல்.ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராகி உள்ளேன்.

மின்சார தட்டுப்பாடு
திமுக ஆட்சிக்கு வந்தால் மின்சார தட்டுப்பாடு வந்துவிடும். எப்போது மின்சாரம் வரும்? போகும்? என்பது தெரியாது. அதிமுக ஆட்சியில் தொடர்ச்சியாக இடைவிடாமல் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.












Click it and Unblock the Notifications