சூடு பறக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம்.. மோடியை சந்திக்க டெல்லி விரைகிறார் முதல்வர் ஓ.பிஎஸ்.. !
ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால் ஓ. பன்னீர்செல்வம் நாளை டெல்லி சென்று மோடியை சந்திக்கிறார். அப்போது அவசரச் சட்டம் பிறப்பிக்க பிரதமரை வலியுறுத்துவார் ஓபிஎஸ்.
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகத்தில் வீரியம் அடைந்துள்ளது. இதனால் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நாளை டெல்லி புறப்பட்டு செல்கிறார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டு தொடர்பான அவசரச் சட்டத்தை பிறப்பிக்க வலியுறுத்த உள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. சென்னை மெரினாவில் மாணவர்களால் நடத்தப்படும் போராட்டத்தில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு தொடர்பாக உறுதியான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இதுபோன்ற தொடர் போராட்டங்களை அடுத்து, ஓபிஎஸ் நாளை பிரதமரை சந்திக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி நாளை ஓபிஎஸ் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். அப்போது, அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த உள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டங்களை கைவிடுமாறு ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளை மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டு குறித்து பேச உள்ளதை குறிப்பிட்டுள்ள ஓபிஎஸ் இந்த வேண்டுகோளை மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் விடுத்துள்ளார்.
மேலும், சட்டத்திருத்தை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது என்பதையும் ஓபிஎஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதனால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications