முதலமைச்சர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் இன்று மாலை ராஜினாமா?
சென்னை: தமிழக முதலமைச்சர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் இன்று மாலை ராஜினாமா செய்யக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மீண்டும் தமிழக முதல்வராக ஜெயலலிதா நாளை மறுநாள் பதவி ஏற்க உள்ளார். சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.

இதற்கான அழைப்பிதழ்கள் பொதுத்துறையால் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நாளை காலை 7 மணிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். பின்னர் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஜெயலலிதா, ஆளுநர் ரோசையாவிடம் வழங்குவார்.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவை முதல்வராக பதவி ஏற்க வருமாறு ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுப்பார். ஜெயலலிதா பதவி ஏற்பதற்கு வசதியாக இன்று மாலையே ஓ.பன்னீர் செல்வம் ஆளுநரை சந்தித்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications