ஐயோ பாவம்.. யாருமே இல்லாத கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிச்சாமி...!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தமிழக முதல்வரின் மதுரை நிகழ்ச்சி பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை என்பது கூட்டம் இல்லாமல் காணப்பட்டதன் மூலம் தெளிவாகியுள்ளது.
மதுரை : மதுரையில் பொதுமக்கள் மற்றும் கட்சியினரின் மன ஓட்டத்தை பார்க்க முதல்வர் தலைமையில் நடத்தப்பட்ட இளைஞர் பெருவிழா இபிஎஸ் அணிக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பை அளிக்கவில்லை.
அதிமுகவின் ஓ.பிஎஸ் அணி, இ.பிஎஸ் அணி ஒன்று சேர்வற்கான பேச்சுவார்த்தைக்கு மத்தியில் இரு அணியினரும் தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் சுற்றப் பயணத்தைத் தொடங்கியுள்ளன.

சென்னையை அடுத்த கொட்டிவாக்கத்தில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு எதிர்ப்பாக மதுரையில் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு இபிஎஸ் அணி திட்டமிட்டது.
ரிங்ரோட்டில் ஜெ. பேரவை

மதுரை ரிங்ரோடு அருகே ஜெயலலிதா பேரவை சார்பில்நடைபெற்ற இளைஞர் பெருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதல்வர் பழனிச்சாமிக்கு முளைப்பாறை, ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. காலையில் நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக முதல்வர் வந்த போது மேடையில் மூத்த அமைச்சர்கள் அனைவரும் ஆஜராகி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் முதல்வர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார்.
திறந்து வைக்கப்பட்ட பாலங்கள்

ஓ.பன்னீர்செல்வம் பேசும் அதே நேரத்தில் மதுரையில் பாலம் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பேரூரையாற்றினார் முதல்வர் பழனிச்சாமி. ஜெயலலிதாவின் புகழ்களை எடுத்துக் கூறி, அவருடைய வழியில் தனக்கு கொடக்கப்பட்ட பதவியை சிறப்பாக வழிநடத்தி செல்வதாக முதல்வர் கூறினார். மேலும் மக்கள் நலத்திட்டங்களுக்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என வழக்கமான அரசு அறிக்கையை வாசித்தார். முதல்வர் பழனிச்சாமி.
கூட்டம் இல்லை

இபிஎஸ் அணி மற்றும் ஓ.பிஎஸ் அணி இரண்டில் எந்த அணிக்கு மக்கள் மற்றும் கட்சியினரின் ஆதரவு இருக்கிறது என்று எண்ண ஓட்டம் பார்க்கும் வகையில் நடத்தப்பட்ட முதல் நிகழ்ச்சியிலேயே முதல்வர் அணிக்கு பேரிடி விழுந்தது. முதல்வர் மேடையில் பேசிக்கொண்டிருக்க கூட்டத்திற்காக போடப்பட்டிருந்த இருக்கைகளில் முன்வரிசையில் இருந்த சேர்களைத் தவிர பெரம்பாலானவை காற்று வாங்கிக் கொண்டே இருந்தன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications