கடலோர மாவட்டங்களில் மழை...நீடிக்கும்!
சென்னை: நவம்பர் 30ம் தேதி முதல் தொடர் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் நேற்று நள்ளிரவுக்கு மேல் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
சென்னையில் இன்று அதிகாலையில் நல்ல மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டமாகவும், சில இடங்களில் மழையும் பெய்தது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையே இந்த மழைக்குக் காரணம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், அண்மையில் உருவான லெஹர் புயல், தமிழகத்தின் நிலப்பரப்பில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சியதால், தமிழகத்தில் மழை பாதிப்பு ஏற்பட்டது. தற்போது இலங்கை மற்றும் தமிழகத்தை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய மழையோ அல்லது மிதமான மழையோ பெய்யக்கூடும். இதே போன்று தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழையோ, மிதமான மழையோ பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றார்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications