ஒரே நாளில் தமிழகத்தின் மூச்சை அமுக்கிய 2 சம்பவங்கள்
தமிழகத்துக்கு காவிரி, நீட் விவகாரங்களில் அதிர்ச்சி அளிக்கும் உத்தரவுகளும் நிகழ்வுகளும் ஒரே நாளில் நடந்துள்ளன.
Recommended Video

சென்னை: தமிழக்கத்தின் மூச்சையே நிறுத்தி சுடுகாடாக்கும் 2 சம்பவங்கள் தமிழர்களை கடுமையாக கொந்தளிக்க வைத்துள்ளது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கு துரோகம் இழைக்கப்பட்டது. குறைக்கப்பட்ட நீரின் அளவையும் திறந்துவிடவில்லை.

இப்போது மேலாண்மை வாரியம் வழக்கில் மே 3-ந் தேதியாவது ஏதேனும் நல்லது நடக்கும் என தமிழகம் காத்திருந்தது. ஆனால் மத்திய அரசு, மேலாண்மை வாரியத்துக்கான வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்யவும் இல்லை.
அதைவிட பெருங்கொடுமை, கர்நாடகாவுக்கு பிரதமர், அமைச்சர்கள் போய்விட்டதால் வரைவு அறிக்கைக்கான ஒப்புதலைப் பெற முடியாது என சொத்தை காரணத்தைச் சொல்லி தமிழகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது மத்திய பாஜக அரசு.
இச்செய்திகள் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் போதே, மூச்சுவிட முடியாத அளவுக்கு இன்னொரு உத்தரவு... தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத வெளிமாநிலத்துக்குத்தான் செல்ல வேண்டும்; தமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத மையங்கள் அமைக்க வேண்டும் என்கிற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டிருக்கிறது.
இப்படி தமிழக மக்கள் மூச்சே விட முடியாமல் மூர்ச்சையாகிப் போகும் அளவுக்கு ஒரே நாளில் 2 சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications