நெடுவாசலுக்கு சென்ற ஹெச். ராஜாவுக்கு எதிர்ப்பு! இளைஞர்கள் கண்டன முழக்கம்!
நெடுவாசல் போராட்ட களத்துக்குச் சென்ற பாஜகவின் ஹெச். ராஜா இளைஞர்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிட்டது.
புதுக்கோட்டை: ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராடி வரும் நெடுவாசல் கிராமத்துக்குச் சென்ற பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நெடுவாசலை விட்டு ஹெச். ராஜா வெளியேற வலியுறுத்தி இளைஞர்கள் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக 18 நாட்களாக நெடுவாசல் கிராமத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவிக்கும் வரை போராட்டத்தை தொடருவோம் என நெடுவாசல் உள்ளிட்ட கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவியிருப்பதாக பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா தெரிவித்திருந்தார். அதேபோல் பாஜகவை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. இல. கணேசன், நாட்டின் நலனுக்காக ஒரு மாநிலம் தியாகத்தைச் செய்யலாம் என கூறியிருந்தார். இந்த கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்த நெடுவாசல் கிராமத்துக்கு நேரில் சென்றார் ஹெச். ராஜா. அப்போது ஹெச். ராஜாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
நெடுவாசலை விட்டு ஹெச். ராஜா வெளியேற வேண்டும் என இளைஞர்கள் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர். இதனால் நெடுவாசலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications