அ.தி.மு.க.வின் ஆடுபுலி - பா.ஜ.க.வின் போங்கு ஆட்டங்கள்.. உக்கிரத்தில் விவசாயிகள்
சென்னை: தமிழக விவசாயிகள் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய முழு அடைப்புப் போராட்டத்தின் போது அண்ணா தி.மு.கவும் பாரதிய ஜனதாவும் நடத்திய கண்ணாமூச்சி ஆட்டங்களால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தினர்.
இந்த முழு அடைப்புப் போராட்டத்தின் போது அண்ணா தி.மு.க. மட்டும் ஆதரவும் இல்லை.. எதிர்ப்பும் இல்லை என்ற நிலையில் இருந்தது.

ஆனால் கர்நாடகா அரசை 'லைட்டா' கண்டித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் போட்டது தமிழக அரசு. அத்துடன் தமிழக சட்டசபை கூட்டத்தையும் அந்த நாளில் ஒத்தி வைத்தது.
இப்படி அண்ணா தி.மு.க. பந்துக்கு 'ஆதரவா இல்லையா' என குழப்ப வைத்ததற்கு காரணம் கர்நாடகாவில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்குதானாம்; விவசாயிகளும் வேணும்; கர்நாடகாவையும் பகைக்க கூடாது என்ற சதுரங்க கூத்துதானாம்.
மேலும் பந்த்தை ஆதரித்தால் உச்சநீதிமன்றம் கண்டிக்கும் என்ற ஒரு அச்சமும் அரசுக்கு இருந்ததாம். அத்துடன் விவசாயிகளின் அதிருப்தியை சமாளிக்கவே தமிழக எம்.பி.க்கள் அத்தனை பேரையும் அழைத்துக் கொண்டு பிரதமரையும் சந்திக்க வைத்ததாம் அண்ணா தி.மு.க. மேலிடம்
அதேபோல் விவசாயிகள் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு எல்லாம் போய்விட்டு வந்தும் முழு அடைப்புக்கு ஆதரவு இல்லை பந்த் தேவையில்லை என்று வசனம் பேசியது பாரதிய ஜனதா.
பிரதமர் மோடியை சந்திக்க சென்ற குழுவில் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் கலந்து கொள்ளவில்லை. இருந்தாலும் பிரதமர் சந்தித்துவிட்டார்... விவசாயிகளது அதிருப்தியைத் துடைத்துவிட்டோம் என துள்ளிக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா.
இருப்பினும் பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் பந்த் தேவையில்லை; பதற்றத்தை உருவாக்குகிறார்கள்.. போராட்ட களமாக்குகிறார்கள் என வைத்த ஒப்பாரி விவசாயிகளை உக்கிரநிலைக்குத் தள்ளியிருக்கிறது.
அண்ணா தி.மு.கவின் ஆடுபுலி ஆட்டமும் பாரதிய ஜனதாவின் போங்கு ஆட்டமும் குறித்து கருத்து தெரிவிக்கும் விவசாயிகளோ, எங்க ஆட்டத்தை தேர்தலில் காட்டுவோம் என்று கண்சிமிட்டுகின்றனர்..
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications