கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக தமிழக மீனவர் சங்கங்கள் அறிவிப்பு
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யாததைக் கண்டித்து கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக தமிழக மீனவர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா வரும் பிப்ரவரி 20, 21 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளன. கச்சத்தீவு தற்போது இலங்கை வசம் இருந்தாலும் அங்குள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழாவில் தமிழகம், இலங்கை மீனவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவது வழக்கம்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே யுத்தம் நடைபெற்ற கால் நூற்றாண்டு காலத்தில் கச்சத்தீவு திருவிழா நடைபெறவில்லை. இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இருநாட்டு மீனவர்களும் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகம், இலங்கையில் இருந்து செல்லும் மீனவர்கள் கச்சத்தீவிலேயே முகாம்கள் அமைத்து தங்கி விடிய விடிய வழிபாடு நடத்திவிட்டு திரும்புவர்.
நடப்பாண்டுக்கான ஏற்பாடுகளை ராமேஸ்வரம் பங்குத்தந்தை சகாயராஜ் செய்து வருகிறார். ஆனால் இலங்கை சிறையில் உள்ள 6 மீனவர்கள், 76 படகுகள் விடுவிக்கப்படாததால் இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்கப் போவதில்லை என தமிழக மீனவர்கள் அறிவித்துள்ளனர். கச்சத்தீவு செல்வதற்கான படகுகளையும் இயக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மீனவர் சங்க நிர்வாகிகளுடன் கச்சத்தீவு விழா ஏற்பாட்டாளர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications