தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிக வாபஸ்
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி தமிழ் நாடு அரசு ஊழியர்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும். உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர்.

பத்திரப்பதிவுத்துறை, வணிகவரித்துறை, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வட்டாட்சியர்கள், உள்ளிட்ட 64 சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம் நிதி அமைச்சர் ஜெயக்குமார், பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அரசு ஊழியர்கள் மேற்கொண்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications