சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமையுங்கள்- தமிழக தலைமைச் செயலர் கடிதம்
சென்னை : உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை இன்றே அமைக்க வேண்டும் என மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகருக்கு தமிழக அரசின் தலைமை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். காவிரி வாரியம் அமைக்க இயலாது என நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த மனுவை திரும்பப்பெற வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் கொடுத்த உறுதி மொழிக்கு எதிராக மத்திய அரசு மனு அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4ம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், மேலாண்மை வாரியத்தின் உறுப்பினர்களைப் பரிந்துரைக்குமாறு சம்பந்தப்பட்ட கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள் சார்பில் தலா ஓர் உறுப்பினர் பெயர்கள் மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு முன்மொழியப்பட்டன.
அதேநேரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு இல்லை. அது தொடர்பான உத்தரவுகளில் மாற்ற செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்தது.
இந்நிலையில் "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பிறப்பித்த உத்தரவுகளில் மாற்றம் செய்ய வேண்டும்' எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தது. இது தொடர்பாக மத்திய நீர் வளத் துறை சார்பில் வழக்குரைஞர் டி.எஸ்.மெஹ்ரா தாக்கல் செய்துள்ள மனுவில்,
1956-ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் விவகாரங்கள் சட்டத்தின் விதிகள் 6(2), 6(ஏ) ஆகியவற்றில், நடுவர் மன்ற உத்தரவுகளை அமல்படுத்தும் திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. இதன்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது உள்ளிட்ட தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவுகளின் அமலாக்க நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலைப் பெற வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தீர்ப்பு அளிக்கும் முன்பு, மத்திய அரசை பிரதிவாதியாக சேர்த்து அதன் கருத்தை நடுவர் மன்றம் கேட்கவில்லை. இதுபோன்ற அமைப்புகளை உருவாக்கும் முன்பு, அதற்கு வகை செய்யும் சட்டம் நாடாளுமன்றத்தில் முறைப்படி நிறைவேற்றப்பட்டு இருக்க வேண்டும். பஞ்சாப் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், பக்ரா - பியாஸ் மேலாண்மை வாரியம், ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகள் மேலாண்மை வாரியங்கள் ஆகியவை இந்த நடைமுறைகளின்படியே உருவாக்கப்பட்டன.
எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த செப்டம்பர் 20, 30 ஆகிய தேதிகளில் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும். முந்தைய உத்தரவை மறுஆய்வுக்கு உள்படுத்தி அதைத் திரும்பப் பெற வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, அதன் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள நீர் நிலைகளில் கள ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 30ல் உத்தரவிட்டிருந்தது.
அதற்குப் பதிலாக, காவிரி மேற்பார்வைக் குழுத் தலைவரும் மத்திய நீர் வளத் துறை செயலருமான அதிகாரி மூலம் உயர்நிலை தொழில்நுட்பக் குழுவை நியமிக்க வேண்டும். அக்குழு காவிரி பாசனப் பகுதிகளில் முழுமையாக ஆய்வு செய்து உண்மை நிலவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய 30 நாள்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசரமாகக் கருதி விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் திங்கள்கிழமை ஆஜராகி கேட்டுக் கொண்டார். அப்போது அவர், "காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்காமல் இருந்திருக்கலாம். இது தொடர்பாக நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்னும் நிலுவையிலேயே உள்ளது. வாரியம் அமைப்பது போன்ற நடவடிக்கை, நாடாளுமன்ற வரம்புக்கு உள்பட்டது' என்று கூறினார்.
இதையடுத்து, "இந்த மனு மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தப்படும். அப்போது, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 6,000 கன அடி தண்ணீர் திறந்துவிடுமாறு பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்தியதா என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி தீபக் மிஸ்ரா குறிப்பிட்டார்.
இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை இன்றே அமைக்க வேண்டும் என மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகருக்கு தமிழக அரசின் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் கடிதம் எழுதியுள்ளார். காவிரி வாரியம் அமைக்க இயலாது என நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த மனுவை திரும்பப்பெற வேண்டும் என்று அந்த கடிதத்தில் தலைமைச் செயலர் குறிப்பிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் கொடுத்த உறுதி மொழிக்கு எதிராக மத்திய அரசு மனு அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications