தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது: ஆளுநர் உரையில் பாராட்டு
சென்னை: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கம் பேணப்பட்டு வருவதாக ஆளுநர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை துவங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் தமிழக ஆளுநர் ரோசையா உரையுடன் கூட்டம் துவங்கியது. ஆளுநர் ரோசையாவின் உரையில், தமிழக அரசு ஏழை, எளிய மக்களின் நலன் காக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, மத நல்லிணக்கம் பேணப்படுவதற்கு பாராட்டுகள் என்று கூறினார்.

தேர்தலில் வெற்றி
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக அரசு வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் என்று உரையாற்றினார் ரோசையா. மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்ததற்கு பாராட்டுகள்.

மின் உற்பத்தி அதிகரிப்பு
கடந்த 4 ஆண்டுகளில் 3,315 மெகாவாட் மின்னணு உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு மின்னணு சேவைகளை வழங்கும் முதல் 3 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

கச்சத்தீவு மீட்பு
கச்சத் தீவை மீட்டால்தான் மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பெற முடியும்.
ரூ.43.98 கோடியில் தமிழ் பல்கலைக்கழகம், மதுரை தமிழ்ச் சங்கக் கட்டடம் கட்டப்படுகிறது.

நீர் சேமிப்பு திட்டங்கள்
திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.330 கோடி செலவில் நீர் சேமிப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. குடிநீர்த் தேவையை சமாளிக்க பூண்டி ஏரி மேம்படுத்தப்பட்டுள்ளது.
மீஞ்சூர், நெமிலிச்சேரியில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

இலங்கைத் தமிழர்கள்
இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்ப இது உகந்த தருணம் இல்லை. இலங்கை அகதிகள் அமைதியான வாழ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

அரசு கேபிள் டிவி
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் பெற தீவிர முயற்சி. மாநிலம் முழுவதும் 200 பொதுச்சேவை மையம் அரசு கேபிள் டிவி மூலம் அமைக்கப்படும்.

ஸ்மார்ட் சிட்டி
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 12 மாநகராட்சிகளை சேர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைக்கு தேசிய நதிநீர் இணைப்பு திட்டமே நிரந்தர தீர்வு.

சரக்கு, சேவை வரி விதிப்பு
சரக்கு, சேவை வரிவிதிப்புக்கு ஒத்தகருத்து ஏற்படுத்த தமிழகம் வலியுறுத்துகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுகின்றன. விலைவாசியை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது.

பசுமை வீடுகள்
4,680 கோடி ரூபாயில் 2.4 லட்சம் பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
தமிழக அரசு ஏழை, எளிய மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு நாட்கள் கூட்டத்தொடர்
ஆளுநர் உரைக்குப் பின்னர் நடைபெற்ற அலுவல் கூட்டத்தில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் மேலும் 4 நாட்கள் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று தொடங்கிய சட்டசபைக்கூட்டத் தொடர் திங்கட்கிழமை வரை நடைபெறும் எனவும் சனி, ஞாயிறு விடுமுறை தினத்தை கணக்கிட்டு புதன், வியாழன், வெள்ளி, மற்றும் திங்கள் வரை சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உரை 3 நாட்கள் நடைபெறும் எனவும், திங்கட்கிழமையன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications